அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

X
தேர்தல் அலுவலகம் திறப்பு
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சந்தைப்பேட்டையில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை மூத்த நிர்வாகி தேர்தல் பணிகளின் பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்தார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக தேமுதிக எஸ்.டி.பி.ஐ கூட்டணி கட்சி சார்பில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் போட்டியிடுகிறார். லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பணிகள் ஆற்றுவதற்காக லால்குடி சந்தைப்பேட்டையில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த தேர்தல் அலுவலகத்தை திருச்சி புற நகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் ஆலோசனையின் படி அதிமுகவின் மூத்த நிர்வாகி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
