செஞ்சியில் அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு

செஞ்சியில் அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு

திறப்பு விழா 

செஞ்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உள்ள ஆலம்பூண்டியில் ரூ.10.19 லட்சம் மதிப்பிலும், சத்தியமங்கலம் கிராமத்தில் 13.15 லட்சம் மதிப்பிலும் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு, தொடர்ந்து அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்தம்மாள் சேகர், அபர்னா ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் கேமல், டிலைட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட அங்கன் வாடி கட்டிடங்களை திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.

அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற 33 மாதங்களில் எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட் டம், நான் முதல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி மாணவ,மாணவிகள் கல்விக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் என்றார். இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் பச்சையப்பன், விஜயராகவன், சத்தியமங்கலம் பங்குத் தந்தை சிரில், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் சோகுப்பம் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் பாஸ்கர், ஒன்றிய தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, இளைஞரணி செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story