பாரதிய ஜனதா தேர்தல் அலுவலகம் திறப்பு

பாரதிய ஜனதா தேர்தல் அலுவலகம் திறப்பு

பாரதிய ஜனதா தேர்தல் அலுவலகம் திறப்பு

கள்ளக்குறிச்சியில் பாரதிய ஜனதா தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸ் சாலை அருகே நடந்த விழாவிற்கு, மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் முருகன், அமைப்பாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். ஒ.பி.சி., அணி மாநிலச் செயலாளர் செல்வநாயகம் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். வேலுார் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் குணா, சிறுபான்மை பிரிவு மாநில பொருளாளர் ஸ்ரீசந்த், மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், பொதுச் செயலாளர் தியாகராஜன், துணைத் தலைவர்கள் கஜேந்திரன், சர்தார்சிங், கருணாகரன், காந்திமதி, சத்தியசீலன். மாவட்ட செயலாளர்கள் ஹரி, ரமேஷ், பிரகாஷ், கிருஷ்ணவேணி, மகளிர் அணி தலைவர் அலமேலு ஆறுமுகம், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் தேவகுமார், தொகுதி இணை அமைப்பாளர் மகேந்திரன் வாழ்த்திப் பேசினர். விழாவில் ஒன்றிய தலைவர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Tags

Next Story