விவசாய விளை பொருள் குளிர் பதன சேமிப்பு கிடங்கு திறப்பு

விவசாய விளை பொருள் குளிர் பதன சேமிப்பு கிடங்கு திறப்பு

விவசாய விளைபொருள் சேமிப்பு குளிர்பதனக் கிடங்கினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு

புதுக்கோட்டை அருகேயுள்ள சத்தியமங்கலத்தில் விவசாய விளைபொருள் சேமிப்பு குளிர்பதனக் கிடங்கினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை அருகேயுள்ள சத்தியமங்கலத்தில் ரூ. 70 லட்சம் அரசு மானியத்தில் கட்டப்பட்டுள்ள விவசாய விளைபொருள் சேமிப்பு குளிர்பதனக் கிடங்கினை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா திறந்து வைத்தார். மாநில அரசின் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் தேசிய தோட்டக் கலை இயக்ககம் ஆகியவற்றின் சார்பில் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான கிடங்கு அமைக்க 35 சதவிகிதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி,புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலத்தில் பயனாளி சர்புதீன் என்பவர் தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பித்து ரூ. 2.52 கோடியில் குளிர்பதனக் கிடங்கு அமைத்துள்ளார். இத்திட்டத்தில் அரசு மானியம் ரூ. 70 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் குளிர்பதனக் கிடங்கில் பழவகைகள், வத்தல், புளி உள்ளிட்ட விவசாய விளை பொருள்களை அதிக விளைச்சல் காலங்களில் பாதுகாப்பாக சேமித்து வைத்து பிறகு விற்பனை செய்து கொள்ளலாம். இந்தக் கிடங்கு 2 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்டது. ஆட்சியர் ஐ.சா. மெர்சிரம்யா இந்தக் கிடங்கை திறந்து வைத்தார். தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கு. அழகுமலை, அன்னவாசல் உதவி இயக்குநர் ச. நந்தகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags

Next Story