நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையம்  திறப்பு
தொன்னாடு ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடந்தது. 
தொன்னாடு ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடந்தது.

சித்தாமூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில், 5, 000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அதிகபடியாக நெல் பயிரிடப்படும் சித்தாமூர் பகுதிகளில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக, தொன்னாடு ஊராட்சியில், 62. 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழா, நடந்தது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். துவக்க விழாவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், தொன்னாடு ஊராட்சி தலைவர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக, 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைய உள்ளனர்.

சிலாவட்டம் பகுதியில், நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து, தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்தது. மழை மற்றும் வெயில் காலங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில், நிரந்தர தீர்வாக, 15, 000 டன் கொள்ளளவு கொண்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க தீர்மானிக்கப்பட்ட்டது. அதன்படி, 14. 42 கோடி ரூபாய் மதிப்பில், மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, நடந்தது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்

Tags

Next Story