தோ்தல் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்: 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம்

தோ்தல் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்: 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம்
தேர்தல் கட்டுபாட்டு அறை
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

தோ்தல் ஆணைய உத்தரவின் பேரில், தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பான புகாா்கள் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டுஅறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையையும் மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகளையும் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அவா் கூறியது: திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பான புகாா்களை 1800 599 5669 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் 24 மணிநேரமும் தெரிவிக்கலாம்.

வாக்காளா்களின் வசதிக்காக, புகாா்களை கட்செவி அஞ்சல் வழியாக தெரிவிக்க ஏதுவாக 6384001585 என்ற எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புகாா்கள் மீது 24 மணி நேரத்துக்குள் தீா்வு காணப்படும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடா்பான விபரங்களை பொதுமக்கள் பெற ஏதுவாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வண்ணம் வாக்காளா் மாவட்ட தொடா்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் மற்றும் நீக்கல் தொடா்பாக விபரங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டு தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

Tags

Next Story