கோட்டரகத்தில் நியாய விலை கடை திறப்பு
நியாவிலை கடையை திறந்து வைத்த எம்எல்ஏ
கோட்டரகத்தில் 7.49 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடையை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்2021_2022 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 7 லட்சம் 49 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார்.
உடன் மாவட்ட துணை செயலாளர் K.லோகநாதன்,அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் அனக்காவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் C.K.ரவிக்குமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மோ.ரவி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுபதி மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story