ஒட்டங்காடு ஊராட்சியில் மீன் மார்க்கெட், அங்காடி திறப்பு 

ஒட்டங்காடு ஊராட்சியில் மீன் மார்க்கெட், அங்காடி திறப்பு 
மீன் மார்க்கெட்
ஒட்டங்காடு ஊராட்சியில் மீன் மார்க்கெட், அங்காடி திறக்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஒட்டங்காடு ஊராட்சியில், மீன் மார்க்கெட், அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. ஒட்டங்காட்டில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நவீன மீன் மார்க்கெட் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

அதேபோல், மதன்பட்டவூரில் ரூ.12.31 லட்சம் மதிப்பீட்டில் அங்காடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து திறந்து வைத்தார். ஒட்டங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் ராசாக்கண்ணு முன்னிலை வகித்தார்.

இதில், திமுக ஒன்றிய செயலாளர் க.அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் பாக்கியம் முத்துவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, பொய்யாமொழி, பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் ஜி.ரகுராமன், ஒட்டங்காடு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஆர்.ராமன், மதன்பட்டவூர் ராமையன், பி.சரவணன், ரகுநாதன், ஊராட்சி செயலர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொங்கல் பரிசு தொடர்ந்து, ஒட்டங்காடு ஊராட்சியில் இரு அங்காடிகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் வழங்கி, பணிகளை ஆய்வு செய்தார்.

Tags

Next Story