செஞ்சி ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு உதவி மையம் திறப்பு

செஞ்சி ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு உதவி மையம் திறப்பு

 செஞ்சியில் பசுமை வீடு, பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகள் உதவும் வகையில் உதவி மையம் தொடங்கப்பட்டது.

செஞ்சியில் பசுமை வீடு, பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகள் உதவும் வகையில் உதவி மையம் தொடங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றிய ஊரக குடியிருப்பு திட்டம், பசுமை வீடு திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், பழங்குடியினர் வீடு திட்டம் உள் ளிட்ட திட்டங்களின் கீழ் பயனாளிகள் வீடு கட்டி வருகிறார்கள். இவர்களுக்கு உதவிடும் வகையில், ஒன்றிய அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டது,

இந்த மையத்தை ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். இங்கு வீடு கட்டுவதற்கான நிலுவை தொகை, தொழில்நுட்ப சிக்கல்கள், நிலம், பட்டா தொடர்பான பிரச்சினைகள், வங்கி கடன் உதவி தேவைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் தொடர் பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது, நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் முல்லை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரபாண்டியன், பழனி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் மற்றும் சிவப்பிரகாசம், வாசு, அய்யாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story