ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் திறப்பு

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் திறப்பு

குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த எம்.எல்.ஏ 

பரமக்குடி அருகே போகலூர், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போகலூர், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை உழவர் துறை சார்பில் தலா இரண்டு கோடி மதிப்பீட்டில் சேமிப்பு கிடங்கு மற்றும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மைய கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டிடங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.இந்த நிகழ்வில் போகலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன் ஒன்றிய துணைத் தலைவர் பூமிநாதன் ஒன்றிய செயலாளர் கதிரவன் மற்றும் வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story