தொழிலாளர் நலவாரிய பதிவு சேவை மையம் திறப்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் பகுதியில் சிஐடியு சங்க அலுவலகத்தில், புதிதாக நலவாரிய பதிவு சேவை மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமை தாங்கினார். விசைத்தறி ஒன்றிய கமிட்டி செயலாளர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார் .
சங்க மாவட்ட செயலாளர் என்.வேலுச்சாமி நிகழ்வை துவக்கி வைத்து பேசினார் .விசைத்தறி, தையல் ,கட்டுமானம், கடையில் வேலை செய்யும் ஊழியர்கள், தெரு சுமை வியாபாரிகள், ஆட்டோ, கார் ,டெம்போ ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என 71 வகையான தொழிலாளர்களுக்கு, நல வாரியத்தில் பதிவு செய்தல், புதுப்பித்தல் ,பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி நிதி, உயர்கல்வி நிதி, திருமண நிதி, மகப்பேறு நிதி, இயற்க்கை மரண நிதி ,ஈமச்சடங்கு நிதி, விபத்து நிதி மற்றும் 60 வயது பூர்த்தி அடைந்த நபர்களுக்கு ஓய்வூதியம், ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த சேவைகள் நல வாரியத்தில் உள்ளதால் ,இதை அனைத்து பகுதியை தொழிலாளர்களும் உழைப்பாளி மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.
தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன உதவி தலைவர் எஸ்.சுப்பிரமணியம், விசைத்தறி சங்கம் மாவட்ட தலைவர் கே.மோகன், வழக்கறிஞர் ஏ.பிரகாஷ் , சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் R.ரவி , CITU முன்னால் மாவட்ட செயலாளர் S. சுப்ரமணியன் வி.ச. E.கோவிந்தராஜ் , பொன்னி சர்க்கரை ஆலை ஆண்டியப்பன், வாலிபர் சங்க தலைவர் லட்சுமணன், Aதண்டபாணி ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர், A. அசன் சிறுபான்மை நலக்குழு, P. துரைசாமி கட்டுமானம். K.குமார், M. ஜெயவேல், Aஅருள்மணி, M அங்கமுத்து விசைத்தறி சொளந்தர்ராஜன ஜென்ரல், M.சரவணன் மாற்றுதிரானாளிகள் அமைப்பு,உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விசைத்தறி சங்க ஒன்றிய பொருளாளர் முருகேசன் நன்றி உரையாற்றினார்..