ஈரோடு கல்லூரியில் ஆய்வகங்கள் திறப்பு

ஈரோடு கல்லூரியில் ஆய்வகங்கள் திறப்பு
X

ஆய்வகங்கள் திறப்பு 

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75 லட்ச ரூபாயில் மேம்படுத்தப்பட்ட விஷவல் கம்யூனிகேசன் துறை திறக்கப்பட்டது.

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் (காட்சி தொடர்பியல்) துறை செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் மாணவ- மாணவிகளின் செயல் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ.75 லட்சம் செலவில் புரோடக்சன் ஸ்டுடியோ, பி.சி.ஆர், அறை, ஆடியோ புரோ டக்சன் ஸ்டுடியோ, போட்டோகிராபி, மல்டி மீடியா, டிரா யிங் ஆகிய ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் செயலாளர் கே.கே.பாலுசாமி தலைமை தாங்கினார். முதலியார், கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.ராஜமாணிக்கம் ரிப்பன்வெட்டி ஆய்வகங்களை திறந்து வைத்தார். இந்த விழாவில் முதலியார் கல்வி நிறுவனங்களின் இணைச் செயலாளர் அருண்குமார் பாலுசாமி, முதல்வர் , போராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story