திருக்கோவிலூரில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் திறப்பு
கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோயிலூரில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை முதல்வர் காணொலி காட்சி மூல திருந்து வைத்தார்.
திருக்கோவிலூர், அண்ணா நகரில், 6ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 1.92 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அறிவு சார் மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நகராட்சி சேர்மன் முருகன், துணைத் சேர்மன் உமாமகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் நவீன வசதிகளை பார்வையிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். ஒப்பந்ததாரர் பாரதி, நகராட்சி ஊழியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Next Story