காவலர் குடியிருப்பில் மருத்துவ பிரிவு, குடிநீர் நிலையம் திறப்பு
திறப்பு விழா
தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர்கள் குடும்பத்தை சேர்ந்த 2000 பேர் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுமார் ரூபாய் 5½ லட்சம் செலவில் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சேதமடைந்த ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள காவலர் மருத்துவ புற நோயாளிகள் பிரிவை தென்மண்டல காவல்துறை தலைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆகியோரின் முயற்சியால் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக புதிய மருத்துவ உபகரணங்களை வழங்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட காவலர் மருத்துவ புற நோயாளிகள் பிரிவையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்ராஜாராம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, உதவி ஆய்வாளர்கள் பிரம்மநாயகம், வெங்கடேசன், கௌசல்யா, அமுதரசு, காவலர் மருத்து புற நேயாளிகள் பிரிவு மருத்துவர் பிரிசில்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.