சுரண்டையில் நுண் உர செயலாக்க மையம் திறப்பு
நுண் உர செயலாக்க மையம்
தென்காசி மாவட்டம் , சுரண்டையில் ரூ.1.34 கோடியில் அமைக்கப்பெற்ற நுண் உர செயலாக்க மையம் திறப்பு விழாவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை நகராட்சியில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நுண் உர செயலாக்க மையத் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத்தலைவா் சங்கராதேவி, நகராட்சி ஆணையாளா்(பொ) ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன் ஆகியோா் மையத்தை திறந்துவைத்துப் பேசினா். இதில், சுரண்டை நகராட்சிப் பொறியாளா் மைதீன், நகராட்சி தலைமை கணக்காளா் முருகன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
Next Story