சேலம் : புதிய பாலம் திறப்பு

X
புதிய பாலம் திறப்பு
சேலம் 56 -வது வார்டு இந்திரா டையிங் தெருவில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சேலம் மாநகராட்சி 56 -வது வார்டு இந்திரா டையிங் தெருவில் நீண்ட நாட்களாக அந்த பகுதி மக்கள் பாலம் கட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. இதே போல் 45-வது வார்டில் ரூ.35 லட்சம் செலவில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்ததையைடுத்து பாலம் மற்றும் பொது சுகாதார வளாகத்தை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் நேற்று திறந்து வைத்தார். இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சிகளில் கொண்டலாம்பட்டி மண்டல தலைவர் அசோகன், பகுதி செயலாளர் சரவணன் , கவுன்சிலர்கள் சீனிவாசன், கனிமொழி , சுகாசினி, வார்டு செயலாளர்கள் ஜீவானந்தம், முருகேஷ், பகுதி துணை செயலாளர் ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் சந்திரன் மற்றும் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
