புதிய விளையாட்டு மைதானம் திறப்பு

புதிய விளையாட்டு மைதானம் திறப்பு

பரமக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் புதிய விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழா நடந்தது. 

பரமக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் புதிய விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழா நடந்தது.
பரமக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் புதிதாக திறக்கப்பட்ட இறகு பந்து மைதானத்தில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. இறகு பந்து விளையாடி மகிழ்ந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கீழ் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இறகு பந்து உள்விளையாட்டு மைதானம் கட்டப்பட்டது. இதனை ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இறகுபந்து உள் விளையாட்டு மைதானத்தில் எம்.பி. நவாஸ் கனி மற்றும் எம்எல்ஏ முருகேசன் ஆகியோர் வீரர்களுடன் சிறிது நேரம் இறகு பந்து விளையாடி மகிழ்ந்தனர்.

Tags

Next Story