புதிய ரேஷன் கடைகள் திறப்பு
பரமக்குடியில் மூன்று இடங்களில் புதிதாக ரேஷன் கடைகளை எம்எல்ஏ., முருகேசன் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் பரமக்குடியில் மூன்று இடங்களில் புதிதாக நியாய விலை கடைகளை எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 153 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 50க்கும் மேற்பட்ட கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்தது. வாடகை கட்டிடங்கள் மழைக் காலங்களில் மழைநீர் கசிவதால் அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்களை பாதுகாக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இதனை அடுத்து பரமக்குடி சின்னக்கடை தெரு, கோகுலர் தெரு, சந்தை திடல் ஆகிய மூன்று இடங்களில் தலா 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடைகள் கட்டப்பட்டது.
இதனை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத் தலைவர் குணா, வட்ட வழங்கல் அலுவலர் கீதா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.