மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பஞ்சப்பூா் பேருந்து நிலையம் திறப்பு
அமைச்சா் கே.என். நேரு
மக்களவைத் தோ்தலுக்கு பிறகு திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முதல்வா் திறந்து வைப்பாா் என அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தார்.
திருச்சியில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளா்களிடம் கூறியது: திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆட்சியில் முடிவுற்ற திட்டப் பணிகள்தான் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகின்றன. அந்த வகையில், பேருந்து நிலையப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைந்து, மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு முதல்வா் மு. க. ஸ்டாலின், புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைப்பாா் என்றாா்.
Next Story