பேரூராட்சி அலுவலகத்தில் வாகன நிறுத்துமிடம் திறப்பு

பேரூராட்சி அலுவலகத்தில் வாகன நிறுத்துமிடம் திறப்பு
கட்டடம் திறந்து வைப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில், வாகனம் நிறுத்துமிடம் திறப்பு விழா, 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் அகற்றும் டேங்கர் வாகனம் வெள்ளோட்டம் விடும் விழா நடைபெற்றது. பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் விழாவுக்கு தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேல் முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், ரூ.17.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்தும் இடத்தை திறந்து வைத்தும், ரூ.26.5 லட்சம் மதிப்பிலான கழிவு நீர் அகற்றும் டேங்கர் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தும், பெயர்ப்பலகையை திறந்து வைத்தும் சிறப்புரையாற்றினார். இதில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், பேரூராட்சி அனைத்து உறுப்பினர்கள், பேரூராட்சி இளநிலை பொறியாளர் ராமலிங்கம் தலைமை எழுத்தர் அருள்மொழி, திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம், ஓய்வு தலைமை ஆசிரியர் கே.வி.கிருஷ்ணன், பேரூராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் நன்றி கூறினார்.

Tags

Next Story