மாப்பிள்ளையூரணியில் மின்வாரிய அலுவலகம் திறப்பு
திறப்பு விழா
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மின்வாரிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராமதாஸ் நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மின்வாரிய அலுவலகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தூத்துக்குடி நகர செயற்பொறியாளர் ராம்குமார் திறந்து வைத்தார். விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமை வகித்தார். விழாவில், மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் பிரேம், குமார், நாகராஜன், திமுக கட்சி நிர்வாகிகள் நிர்வாகிகள் பொன் பாண்டியன், எஸ்ஆர் கணேசன், சேசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story