புளியங்குடி இலவச சேவை அலுவலகம் திறப்பு

X
தென்காசி மாவட்டம்,புளியங்குடியில் பொதிகை அறக்கட்டளை சார்பில் சேவை மையம் தொடங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி ஆர்.எஸ்.கே.பி தெருவில் தென்காசி பொதிகை அறக்கட்டளையின் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தை அதன் நிறுவனத் தலைவர் எஸ். ஆர்.கிருஷ்ணன் தலைமையில் திறந்து வைத்தார்.
இதன் மூலமாக முதியோர்களுக்கு பாதுகாப்பு வசதி, உணவு, தங்குமிடம் இலவசமாகவும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி,படித்த இளைஞர்கள், தொழில் புரிவோருக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அதன் தலைவர் கிருஷ்ணன் தெரிவித்தார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
Next Story
