மயிலாடுதுறையில் நியாயவிலை கடை திறப்பு

மயிலாடுதுறையில் நியாயவிலை கடை திறப்பு

நியாயவிலை கடை திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சியில் புதிதாகக் கட்டப்பட்ட 2 நியாயவிலைக் கடைகளின் கட்டடங்களை எம்எல்ஏ ராஜகுமார் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை , மன்னம்பந்தலில் இருவேறு இடங்களில் நியாயவிலைக்கடைகள் கட்டித்தர கிராமமக்கள் தொடர் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.9.16 லட்சம் மதிப்பீட்டில் பகுதிநேர அங்காடி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை அங்காடி ஆகிய 2 நியாயவிலை கடைகளுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

ஊராட்சித் தலைவர் பிரியா பெரியசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு நியாய விலைக்கடைக் கட்டடங்களை திறந்து வைத்து பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story