இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை திறந்து வைப்பு

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை திறந்து வைப்பு

மறுவாழ்வு முகாம் திறப்பு

கடலூர் மாவட்டம், உடையார்குடி பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம் உடையார்குடி பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூபாய் 3.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் திறந்து வைத்தனர்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் இரா.சரண்யா, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் இரமேஷ், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story