ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் திறப்பு
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் மாா்ச் மாத உண்டியல் காணிக்கையாக ரூ 42.72 லட்சம் ரொக்கம் உள்பட தங்கம், வெள்ளிக் காசுகள் பக்தா்கள் செலுத்தி உள்ளனர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி மாா்ச் மாதத்திற்கான உண்டியல் காணிக்கையை வியாழக்கிழமை காலை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் முன்னிலையில் திறக்கப்பட்டு கோயிலில் உள்ள கருடாழ்வாா் சன்னதி அருகே எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ. 42 லட்சத்து 72 ஆயிரத்து 37-ம், தங்கம் 62 கிராம், வெள்ளி 410 கிராம், வெளிநாட்டு பணத் தாள்கள் 204 -ம் கிடைக்கப்பெற்றது. பணியில் கோயில் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.
Next Story