சீர்காழி தாடாளன் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சீர்காழி தாடாளன் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

 சீர்காழி தாடாளன் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வலது பாத தரிசனம் நடந்தது; ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சீர்காழி தாடாளன் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வலது பாத தரிசனம் நடந்தது; ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திரு விக்ரம நாராயண பெருமாள் எனப்படும் தாடாளன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் தனது இடது பாதத்தை ஆகாயத்தை நோக்கி தூக்கியவாரு உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார் . உற்சவர் நாடாளும் பெருமாள் லோகநாயகி தாயாருடன் அருள் பாலித்து வருகிறார்.108 திவ்ய தேசத்தில் 28வது திவ்ய தேசமாக இக்கோவிலில் மூலவர் திரு விக்ரம நாராயணப் பெருமாள் வலது பாதத்தை ஆண்டு தோறும் ஏகாதசி தினத்தில் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய முடியும்.

பெருமாளின் வலது பாதத்தில் அருகே ஓர் அடி உயரத்தில் தவிட்டு தாடாளன் விக்ரகத்தையும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் . இக்கோவிலில் ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் தாடாளன் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து வைக்கப்பட்டு சாத்துமுறை நடைபெற்றது தொடர்ந்து ரத்தின அங்கி அலங்காரத்தில் பெருமாள் சொர்க்கவாசல் வழியே எழுந்தருள கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். . பூஜைகளை பத்ரிநாத் பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.

Tags

Next Story