ஒரு ஆண்டிற்கு மேலாக பூட்டிய கோயில் திறப்பு
கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
ஒரு ஆண்டிற்கு மேலாக பூட்டிய கோயில் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வடமதுரை : கொம்பேரிபட்டி மம்மானியூரில் ஒரு ஆண்டிற்கு மேலாக பூட்டி கிடக்கும் காளியம்மன் கோயில் போலீசார் பாதுகாப்புடன் நடந்த ஊர் பஞ்சாயத்து கூட்டத்திற்கு பின் திறக்கப்பட்டது.மம்மானியூர் காளியம்மன் கோயில் தொடர்பாக இரு தரப்பாக செயல்பட்டனர்.
இதனால் கோயில் ஓராண்டிற்கும் மேலாக பூட்டியே கிடந்தது. போலீசார், வருவாய்த்துறையினருக்கு அடிக்கடி புகார் சென்றாலும் பிரச்னை நீடித்தது. இந்நிலையில் டி.எஸ்.பி., துர்காதேவி அறிவுரைபடி கிராம பஞ்சாயத்தில் பேசி தீர்ப்பது முடிவானது.இதற்காக நேற்று பல ஊர் பிரமுகர்கள் மம்மானியூருக்கு வரவழைக்கப்பட்டனர்.
வடமதுரை போலீசார் பாதுகாப்புடன் பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. இதில் தீர்வு கிடைக்க ஓராண்டிற்கு மேலாகபூட்டி கிடந்த கோயில், கோயில் வீடும் நேற்று திறக்கப்பட்டது
Tags
Next Story