காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்குடியினர் குடியிருப்புகள் திறப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், காஞ்சிபுரம் வாலாஜாபாத் உள்ளிட்ட ஐந்து தாலுகாக்களில் வீடு கட்டுவது என அரசு திட்டம் தீட்டியது. இந்த திட்டத்துக்காக சுமார் 19 கோடியே 37 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கட்டுமானம் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த கட்டுமானங்கள் நிறைவு பெற்று, நாளை முதல்வர் இந்த வீடுகளைத் திறந்து வைக்கிறார்.
காணொளி காட்சி வாயிலாக இந்த திட்டத்தை மக்களுக்கு அறிவிக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இது போல உத்திரமேரூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள மலையாங்குளம் பகுதியில் 178 வீடுகள் கட்டித் தருவது எனவும், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் குண்டுகுளம் பகுதியில் 58 வீடுகள் கட்டித் தருவது எனவும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ஊத்துக்காட்டில் 76 வீடுகள் கட்டித் தருவது எனவும், சிங்காடிவாக்கம் பகுதியில் 100 வீடுகள் கட்டித் தருவது எனவும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் காட்ராம்பாக்கம் பகுதியில் 31 வீடுகள் கட்டித் தருவது எனவும் உறுதியளிக்கப்பட்டு. கடந்த இரண்டு ஆண்டு கால கட்டுமான பணிகளுக்குப் பிறகு, தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மலையான்குளம் கிராமத்தில் தலா ரூபாய் 4.37 லட்சம் மதிப்பீட்டில் 178 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தெருக்களின் பெயர்கள் அனைத்தும் தமிழ் புலவர்கள் பெயரில் அமைந்துள்ளது. ஒவ்வொரு குடியிருபிற்கும் மின்சார வசதி, கழிவறை வசதி, குடிநீர் இணைப்பு , தனிநபர் உறிஞ்சிக் குழாய், சிமெண்ட் சாலை விளக்கு என அனைத்து வசதிகளுடன் காற்றோட்டமிக்க ஜன்னல்கள் உடன் குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ளது இக்குடியிருப்புகளை நாளை சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்து வீடுகளில் சாவிகளை ஒப்படைக்கிறார். பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் தற்போது திறப்பு விழா இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.