நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
திறப்பு விழா 
ராயபுரம் அருகே ரூ.1.47 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் (14.03.2024) இராயபுரம் மண்டலம், வார்டு-55க்குட்பட்ட அப்பு மேஸ்திரி தெருவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ், ரூ.1.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) ஜெய சந்திர பானு ரெட்டி, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) சாந்தகுமாரி, மண்டலக் குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் நவீன், மாநகர நல அலுவலர் டாக்டர் ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story