மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனை நிலையம் திறப்பு.
அனைகட்டு அருகே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனை நிலையம் திறப்பு
அனைகட்டு அருகே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனை நிலையம் திறப்பு
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கந்தநேரி கிராமத்தில் அகரமாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனை நிலையத்தை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் வேளாண் பொருட்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கந்தநேரி கிராமத்தில் அகரமாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் அப்பகுதி சேர்ந்த உழவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிபொருட்கள், மற்றும் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் ஆகியவை தரமாகவும் நியாயமாகவும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.
Next Story