வேதாரண்யத்தில் வானவில் மையம் திறப்பு
வானவில் மையம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பாலின பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காண்பதற்கு GRC-Gender Resource Center மையம் (வானவில் மையம்) அமைக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பிரச்சனைகள் அடையாளம் கண்டு அதற்கு தீர்வு காண்பதே பாலின வள மையம் ஆகும். GRC- பாலின வள மையம் (வானவில் மையம்) பெண்களுக்கு ஏற்படும் குடும்ப பிரச்சனைகள், பாலின வன்கொடுமைகள், பெண் கல்வி தடை. இளம் வயதில் திருமணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு போன்றவற்றிக்கு தீர்வு காண்பது. வரதட்சனை கொடுமைகள் போன்ற பிரச்சனைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மருத்துவ வசதி, சட்ட ரீதியான தீர்வு தங்குவதற்கு இடம், மருத்துவ ஆலோசனைகள், காவல் துறை உதவி மற்றும் (One Stop Centre) வழங்கப்படவுள்ளது.
ஆலோசனைகள் போன்ற சேவைகள் அதனை தொடர்ந்து பாலின சமத்துவ உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவர் ஆகியோர் முன்னிலையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர். பின்னர் 26 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.21,70,000/- மதிப்பீட்டில் சமூதாய முதலீட்டு நிதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவர் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .பேபி வேதாரண்யம் வட்டார ஆத்மா குழுத்தலைவர் என்.எஸ்.சதா சிவம், வேதாரண்யம் நகர்மன்றத்தலைவர் மா.மீ.புகழேந்தி, திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) முருகேசன், மாவட்ட சமூகநல அலுவலர் .கி.திவ்வியபிரபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் .எழிலரசி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.