நாமக்கல் அதிநவீன வசதிகளுடன் வாசன் கண் மருத்துவமனை திறப்பு
வாசன் கண் மருத்துவமனை திறப்பு விழா
நாமக்கல் - திருச்சி சாலையில் செயல்பட்டு வரும் வாஸன் கண் மருத்துவமனையில் தற்போது உலகத் தரத்தில் அதிநவீன கருவிகள் மற்றும் உயர்த்தர கண் சிகிச்சை மையமாக புதுப்பொலிவுடன் செயல்பட உள்ளது. நாமக்கல்- திருச்சி சாலையில் வாஸன் கண் மருத்துவமனை ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும் புதுப்பொலிவுடன் இங்கு உலகத்தரம் வாய்ந்த நவீன கண் சிகிச்சை கருவிகளுடன் திறப்பு விழா நடைபெற்றது.மீண்டும் புதுப்பொலிவுடன் துவங்கப்பட்ட வாஸன் கண் மருத்துவமனையை நாமக்கல் தங்கம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.குழந்தைவேல் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அருள் மற்றும் நாமக்கல் SBI வங்கி மேலாளர் நித்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினர். வாஸன் கண் மருத்துவமனை (தமிழ்நாடு) தலைமை இயக்குநர் டாக்டர் கமல் பாபு, சேலம் வாஸன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் செல்வ குமாரி,
நாமக்கல் வாஸன் கண் மருத்துவமனை மருத்துவர் பக்கிரிசாமி மற்றும் நாமக்கல் வாஸன் கண் மருத்துவமனை கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பவித்ரா, வாஸன் கண் மருத்துவமனை இயக்குநர் சுந்தரமூர்த்தி, மதுரை பொது மேலாளர் பன்னீர்செல்வம், கோயம்புத்தூர்/ சேலம் பொது மேலாளர் வெங்கடேஷ் ஆகியோர் மருத்துவமனையின் சிறப்புகளை எடுத்துரைத்து அவர்கள் பேசுகையில்... சென்னை,
மதுரை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் கிடைக்கும் கண் சம்பந்தமான அனைத்து சிகிச்சை வசதிகளும் இனி நாமக்கல் வாஸன் கண் மருத்துவமனையில் கிடைக்கும் எனவே நாமக்கல் மாவட்ட மக்களுக்கு நேர மற்றும் பண விரயம் குறையும் மேலும் மத்திய, மாநில அரசு சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள், தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் சேவையை நாமக்கல் வாஸன் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இம்மருத்துவமனை நாமக்கல் மாவட்ட பொது மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய உள்ளது. திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை சேலம் வாஸன் கண் மருத்துவமனை மண்டல மேலாளர் செல்வம் மற்றும் வாஸன் கண் மருத்துவமனை அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.