நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வார் ரூம் திறப்பு

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வார் ரூம் திறப்பு
X

வார் ரூம் திறப்பு

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வார் ரூம் ( கட்டளை மையம்) திறக்கப்பட்டுள்ளது.

வரும் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வார் ரூம் என்னும் கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநில திமுக சட்டத்துறை செயலாளர்என் ஆர் இளங்கோவன் திறந்து வைத்தார்.நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தனகரன் வரவேற்றார்.

மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, துணைத்தலைவர் சரவணகுமார்,துணை அமைப்பாளர்கள் வெங்கட் கண்ணன் நல்லுசாமி, ஆனந்த், ரமேஷ், மாதேஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழும்பூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும் மாநில சட்டத்துறை நிர்வாகி ரவிச்சந்திரன் மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,

திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு திருச்செங்கோடு நகரச் செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் அணி இளைஞரணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story