காலிங்கராயன் வாய்க்காலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

காலிங்கராயன் வாய்க்காலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர் 

காலிங்கராயன் வாய்க்காலிருந்து பாசனத்திற்கு அமைச்சர் முத்துசாமி தண்ணீர் திறந்து வைத்தார்

ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

முதல்வர் உத்தரவின் படி காலிங்கராயன் வாய்க்கால் பழைய பாசன பகுதிகளுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 23 வரை 120 நாட்களுக்கு 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்றும் இன்று முதல் 23.04.2024 வரையிலான காலத்தில் முதல் 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 150 கன அடி வீதமும், அடுத்த 60 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 450 கன அடி வீதமும் மற்றும் மீதமுள்ள 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 500 சுன அடி வீதமும் ஆக மொத்தம் 120 நாட்களுக்கு இரண்டாம் பருவ பாசனத்திற்கு 4017.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தற்போதைய நீர் இருப்பு மற்றும் வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிடப்படும்.

எனவே, விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

Tags

Next Story