சுசீந்திரம் கோவில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறப்பு

சுசீந்திரம் கோவில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறப்பு
சுசீந்திரம் தெப்பகுளத்துக்கு அணை நீர் வருவதை பார்வையிட்ட அறங்காவலர் குழுவினர்
கன்னியாகுமரி மாவட்டம்,சுசீந்திரம் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று, சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தெப்பத் திருவிழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் மே 8 ம் தேதி தொடங்கியது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா, 10-ம் திருவிழாவான(மே-17)ம் தேதி இரவு 8-மணிக்கு தெப்ப திருவிழா நடக்கவுள்ளது. தெப்பத் திருவிழா கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் நடக்கும். தற்போது கோடை காலம் என்பதாலும், கோடை மழை பொய்த்ததாலும், தெப்பத்தில் தண்ணீர் 2 முதல் 5 அடி குறைந்துள்ளது. இதனால் தெப்பத்தில், சுவாமி எழுந்தருளி சென்று வர சிரமம் இருக்கும்.

இதனால் தண்ணீர் தேவைக்காக பேச்சிப்பாறை அல்லது பெருஞ்சாணி அணைகளில் இருந்து திறந்து விட வேண்டும் என குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து, தெப்பத்திற்கு வேண்டிய தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.

கோரிக்கை மனு ஏற்கப்பட்டு தமிழக முதலமைச்சர் மு.க., ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவில் குமரி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பாடு செய்யப்பட்டது. தண்ணீர் பழையாறு வழியாக சோழன் திட்டை தடுப்பணை மதகு வழியாக தெப்பத்திற்கு வருகிறது.

Tags

Next Story