நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பேட்டரி கார்கள் இயக்கம்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில்  பேட்டரி கார்கள்  இயக்கம்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பேட்டரி கார்கள் இயக்கம்


குமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு டெண்டர் முடிவுக்கு வந்ததாலும் கொரோனே காரணமாகவும் பேட்டரி கார்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது.இந்த நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தற்போது சிறப்பு ரெயில்கள் மற்றும் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது.

எனவே பேட்டரி கார் வசதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பேட்டரி கார் இயக்க டெண்டர் விடப்பட்டது. இது முடிவுக்கு வந்ததும் 2 பேட்டரி கார்கள், நாகர்கோவில் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.

அதனை இயக்க 2 பெண் டிரைவர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று முதல் அந்தக் கார்கள் இயக்கப்பட்டன. ஒரு பயணிக்கு ரூ.10 கட்டணத்தில் பேட்டரி கார் இயக்கப்பட்டது. இந்தக் கார்கள், முதலில் நடைமேடையில் மட்டும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Tags

Next Story