மே.2 முதல் சேலம்-விருத்தாச்சலம் பயணிகள் ரெயில் கடலூர் வரை இயக்கம்

மே.2 முதல்  சேலம்-விருத்தாச்சலம் பயணிகள் ரெயில் கடலூர் வரை இயக்கம்

பைல் படம் 

வரும் மே.2 முதல் சேலம்-விருத்தாச்சலம் பயணிகள் ரெயிலை கடலூர் வரை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

சேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கும், அங்கிருந்து மறு மார்க்கத்தில் சேலத்திற்கும் பயணி்கள் ரெயில்கள் (வண்டி எண்கள்-06122, 06121) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பயணிகள் ரெயில் அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி முதல் சேலத்தில் இருந்து கடலூர் வரை இயக்கப்படும். இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் விருத்தாசலம்-சேலம் பயணிகள் ரெயில் மே மாதம் 3-ந் தேதி முதல் கடலூரில் இருந்து சேலம் வரை இயக்கப்படும். இதற்கான அனுமதியை ரெயில்வே வாரியம் அளித்துள்ளது.

அதன்படி சேலம்-கடலூர் துறைமுகம் பயணிகள் (வண்டி எண்-06122) ரெயில், மே மாதம் 2-ந் தேதி முதல் சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு விருத்தாச்சலம் சென்றடையும். அங்கிருந்து 9.10 மணிக்கு புறப்பட்டு இரவு 10.25 மணிக்கு கடலூர் துறைமுகம் சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் கடலூர் துறைமுகம்-சேலம் பயணிகள் ரெயில் (வண்டி எண்-06121) மே மாதம் 3-ந் தேதி முதல் கடலூர் துறைமுகத்தில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு காலை 9.05 மணிக்கு சேலம் ஜங்ஷன் வந்தடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story