கீழநீலிதநல்லூரில் கண் மருத்துவ முகாம்
வாய்ஸ் ஆப் தென்காசி பவுன்டேசன் சார்பில் கீழநீலிதநல்லூரில் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ஒன்றியம் கீழநீலிதநல்லூர் ஊராட்சியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுன்டேசன் சார்பில் நிறுவனர் ஆனந்தன் ஏற்பாட்டில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாம் மற்றும் மத்திய அரசு இலவச மருத்துவ காப்பீடு முகாம் நடைபெற்றது. கண் பரிசோதனை முகாமில் 130 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அதில் 30 நபர்கள் அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் மேலநீலித நல்லூர் பாஜக ஒன்றிய தலைவர் பரமசிவன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர் நந்தீஸ்வரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Next Story