ஈரோடு தொகுதியில் திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளருக்கு வாய்ப்பு
திமுக நிர்வாகி
ஈரோடு பகுதியைச் சேர்ந்த திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பதவி வகிக்கும் பிரகாஷ் என்பவருக்கு வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் திமுக மொத்தம் 21 தொகுதிகளிலும், கூட்டணி கட்சி என காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் மற்ற கட்சிகளுக்கு 9 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக ஈரோடு பகுதியைச் சேர்ந்த திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரகாஷ் வயது 48 போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இவரது குடும்பம் திமுகவின் கட்சியின் பின்புலத்தை கொண்டு உள்ளாட்சி பொறுப்புகளை வகித்தி வருகின்றனர். மேலும் இவர் விவசாயம் மற்றும் அரசு காண்ட்ராக்ட், தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்
Tags
Next Story