அரசு புறம்போக்கு நிலத்தில் கம்பிவேலி அமைக்க எதிர்ப்பு
கெங்கவல்லி அடுத்த தெடாவூர் பேரூராட்சியில், சிவன் கோயில் அருகில் உள்ள நத்தமேடு பகுதியில் அரசு புறம்போக்கு நிலம்உள்ளது. அப்பகுதி விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் நெல், சோளம் மற்றும் பல தானியங்களை இந்த நிலத்தில் போட்டு அடிப்பதற்கான களமாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் வருவாய் துறையினர், அந்த நிலத்தை பாதுகாக்கும் பொருட்டு, நிலத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைக்க நேற்று ஏற்பாடு செய்தனர் இதையறிந்த அப்பகுதியைகூறி பணியை நிறுத்தினர். தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கெங்கவல்லி தாலுகா அலுவலகம் சென்றனர். அப்போது சமூகபாதுகாப்பு தாசில்தார் அன்புச்செழியன் பணிக்காக வெளியே புறப்பட்டார். அவரது ஜீப்பை மறித்த விவசாயிகள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் தாசில்தார் பாலாஜியிடம் முறையிடுங்கள் என தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார். இதையடுத்து விவசாயிகள் தாசில்தார் பாலாஜியிடம். கோரிக்கை மனுவை வழங்கினர். இதுகுறித்து வருகிற 26ம்தேதி நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தனர். இதையடுத்து சமாதானமடைந்த விவசாயிகள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.