இலவசங்கள் இருக்கிறது என எதிர்க்கட்சிகள் வாதம்: திமுக வேட்பாளர்

இலவசங்கள் இருக்கிறது என எதிர்க்கட்சிகள் வாதம்: திமுக வேட்பாளர்

பிரச்சாரத்தில் ஈடுபட்ட அருண்நேரு

திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு தனது ஆதரவாளர்களுடன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் .

இந்தியா கூட்டணியின் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அருண்நேரு போட்டியிடுகிறார். இந்நிலையில் தாளக்குடி ஊராட்சியில் தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தை தொடங்கி வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் அவருக்கு உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது பெண்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதனை தொடர்ந்து திமுக வேட்பாளர் அருண்நேருபேசியதாவது .தமிழ்நாட்டில் இலவசங்கள் இருக்கிறது என எதிர்க்கட்சிகள் வாதம் செய்கின்றனர்.பணம் சம்பாதிப்பது நம்ம ஊர் மக்கள், செலவு செய்வது நம்ம ஊர் மக்களுக்காக, இவர்கள் யார் சொல்வது, இவர்களா பணம் தருகிறார்கள்.

இவர்களிடத்தில் கேட்ட கொடுக்கிறோம்.கேட்ட பணத்தையே கொடுப்பதில்லை. தமிழ்நாட்டு பணம் தமிழக மக்களுக்கு தான் செல்ல வேண்டும். நியாயமாக அது மகளிருக்கான உரிமைத் தொகை இலவசம் கிடையாது என பேசினார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன்,

ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story