சிப்காட் நிலம் கையகப்படுவதற்கு எதிர்ப்பு

சிப்காட் நிலம் கையகப்படுவதற்கு எதிர்ப்பு

முற்றுகையிட்ட மக்கள் 

தூத்துக்குடி மாவட்டம் கலைஞானபுரம் கிராமத்தில் சிப்காட் நிலம் கையகப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது கலைஞானபுரம் கிராமம் இந்த கிராமத்தில் உட்பள தொழில் மற்றும் விவசாயத்தை நம்பியே பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர் இந்நிலையில் கலைஞானபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிப்காட் நிறுவனம் சார்பில் சுமார் 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்துள்ளது.

இதில் முதற்கட்டமாக சுமார் 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அந்த பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில் கதிர்வீச்சு அதிகம் வெளிப்படக்கூடிய டவர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கலைஞானபுரம் சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் பகுதியில் தனியார் தொலைதொடர்பு நிறுவனம் சார்பில் அதிக கதிர்வீச்சுடன் கூடிய டவர்கள் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த டவர்கள் அமைக்கப்பட்டால் தங்கள் கிராமங்களில் கதிர்வீச்சால் பல்வேறு நோய்கள் உருவாக கூடும் மேலும் இந்தப் பகுதியில் தனியார் தொலைதொடர்பு நிறுவனம் சார்பில் சுற்றுச்சுவர் எழுப்புவதால் தாங்கள் விவசாய நிலங்கள் மற்றும் பல பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த பட்டதன் காரணமாக தங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் உப்பள தொழில் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டு வேலை இழந்து உள்ளதாகவும் அவ்வாறு சிப்காட் நிறுவனம் சார்பில் தொழில் துவங்கப்பட்டால் வேலையில் இருந்துள்ள கிராம மக்களுக்கு வேலை கிடைக்கும் வகையிலான நிறுவனங்களை அமைக்க வேண்டும் எனவே தங்கள் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும்,

கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story