அல்லித்துறையை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு
திருச்சி மாநகராட்சி
அல்லித்துறையை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த கிராம மக்கள் கூறியது: அல்லித்துறை கிராமம் விவசாயம் சாா்ந்த பகுதி. 500 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய விளைநிலங்களை கொண்ட பகுதி. இதனை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதனால், இப்பகுதி மக்களின் உரிமைகளும், சலுகைகளும் பறிக்கப்படுவதுடன், கடுமையான வரிவிதிப்பு ஏற்படுத்தப்படும். இதனால் கிராமமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாய தொழிலாளா்களின் வேலைவாய்ப்பும் பறிபோகும் என்றனா். தோ்தல் காரணமாக குறைதீா் கூட்டம் நடைபெறாததால் தங்களது மனுவை ஆட்சியரகத்தில் உள்ள பெட்டியில் செலுத்திச் சென்றனா்.
Next Story