தடுப்புச் சுவர் கட்ட எதிர்ப்பு : அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தடுப்புச் சுவர் கட்ட எதிர்ப்பு : அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சங்கராபுரம் அருகே மண் அரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர் கட்டும் பணிக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.


சங்கராபுரம் அருகே மண் அரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர் கட்டும் பணிக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

சங்கராபுரம் அருகே மண் அரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர் கட்டும் பணிக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. சங்கராபுரம் அடுத்த மேலப்பட்டு கிராமத்தில் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் ஓடையில் 1.60 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மழைக் காலத்தில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் கட்டும் பணி நடக்கிறது.

இதனால், ஓடை பாதை வழியாக அப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று தடுப்புச் சுவர் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பேரில், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story