கொடிகம்பம் அமைக்க எதிர்ப்பு : பாஜக - காவல்துறையினர் தள்ளுமுள்ளு

கொடிகம்பம் அமைக்க எதிர்ப்பு : பாஜக - காவல்துறையினர் தள்ளுமுள்ளு
X

போலீசாரிடம் வாக்குவாதம் 

விருதுநகரில் பாஜக கொடி கம்பம் நட எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் கொடிக்கம்பங்கள் நடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதனை முன்னிட்டு நேற்று விருதுநகர் முத்தால் நகரில் பாஜக மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் மாநில இணைபொருளாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொடிக்கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த

காவல்துறையினர் அனுமதி இல்லாமல் கொடிக்கம்பத்தை ஊன்ற கூடாது என கூறினர். ஆனால் பாஜகவினர் அதை பொருட்படுத்தாது கொடிக்கம்பம் அமைக்க முயற்சித்தனர். அதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் காவல்துறையினருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்

Tags

Next Story