நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு - சிபிஎம் ஆர்ப்பாட்டம் 

திருவையாறு நகராட்சியுடன் விளாங்குடி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறுடன் விளாங்குடி ஊராட்சியை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியக் குழு உறுப்பினர் பி.செந்தாமரைச்செல்வி தலைமை வகித்தார். எஸ்.சுமிதா, கே.விஜயகுமார், கே.வரதராஜன், எஸ்.சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர். பிரதீப் ராஜ்குமார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.பழனி அய்யா, எம்.ராம், எம்.கதிரவன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், கிராமப் பொதுமக்கள், விவசாயத் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். விளாங்குடி ஊராட்சியை, திருவையாறு நகராட்சியாக தரம் உயர்த்தினால் 100 நாள் வேலைத்திட்டம் பாதிக்கப்படும். அரசின் பல்வேறு சலுகைகள் கிடைக்காது. இது பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கும். நகர விரிவாக்கம் என்ற பெயரில் விளைநிலங்கள் களவாடப்படும். விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரமான ஊரக வேலைத் திட்டம் பாதிக்கப்படும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து வட்டாட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story