டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பஸ் மறியல் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அடுத்த நடுத்தேரி, மாங்குழி, வாடிவிளை செல்லும் சாலையில் டாஸ்மாக் நிர்வாகம் புதிதாக கடைதிறக்க முயற்சி மேற்கொண்டு இடத்தைகளை ஆய்வு செய்து சென்றுள்ளனர். இப்பகுதியை சுற்றி சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திங்கள்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் திங்கள்நகரில் நேற்று நடந்தது. திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன் தலைமை வகித்தார். காங்கிரஸ், திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமுமுக உள்ளிட்ட பல கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக எதிர்ப்பு குழு 13 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நடுத்தேரி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கண்டன போஸ்டர்கள் ஒட்டுவது. மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏ எம்பி அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து முறையிடுவது. டாஸ்மாக் மாவட்ட மேலாளரை மீண்டும் சந்தித்து மீண்டும் மனு கொடுப்பது. தேவைப்பட்டால் திங்கள்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களை திரட்டி திங்கள்நகர் - மணவாளக்குறிச்சி சாலையில் பஸ் மறியல் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story