கைலாசநாதர் கோவில் நுழைவாயில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு

கைலாசநாதர் கோவில் நுழைவாயில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு
கைலாசநாதர் கோவில் நுழைவாயில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவில் நுழைவாயில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு எழுந்துள்ளது.

திருப்போரூரில் பிரணவ மலையில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் நுழைவு வளைவு, ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி உள்ளது. நெடுஞ்சாலைத் துறை சார்பில், ஓ.எம்.ஆர்., சாலையோரம் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கோவில் நுழைவு வளைவின் மேற்கு பகுதியில் வடிகால்வாய் அமைக்க, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. இதை அறிந்த பக்தர்கள், நுழைவு வளைவிற்கு எந்த பாதிப்பு ஏற்படக்கூடாது எனவும், நுழைவு வளைவின் மேற்கு பகுதியில் வடிகால்வாய் அமைக்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதோடு, நுழைவு வளைவு கிழக்கு பகுதியில் வடிகால்வாய் அமைக்கலாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, பக்தர்கள், கோவில் நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story