சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு!

அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்கம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

உடுமலை அருகே அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தை ஆற்றில் தடுப்ப ணை கட்டுவதற்கு எதிர்ப்பு - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக கேரள எல்லையில் முற்றுகை போராட்டம் திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும் 110 குடிநீர் திட்டங்கள் மூலம் ஏராளமான பொது மக்கள் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர் .இந்த நிலையில் அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தை ஆற்றில் குறுக்கே தற்சமயம் கேரளா அரசு குடிநீர் தேவைக்கு என தடுப்பணை ஒன்று கட்டி வருகின்றது .

இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளதுஇதற்கிடையில் தடுப்பணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு எனவே கேரளா அரசு உடனடியாக தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக கேரளா எல்லையில் உள்ள ஒன்பதாவது சோதனை சுவாடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது தடுப்பனை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டுமென கோசங்கள் எழுப்பபட்டது. இதனால்தமிழக கேரளா எல்லைபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story