செயல் அலுவலர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு - ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு
செயல் அலுவலர் அலுவக கட்டுமான பணி
அரியலூர் மாவட்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ளது பழமைவாய்ந்த கழுமழைநாதர் திருக்கோவில். இந்த திருக்கோவில் முன்பு யாகசாலைகள் நடைபெறும் இடத்தில் இந்துசமய அறநிலைய துறையின் சார்பில் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கு அடிதளம் அமைக்க பொக்லைன் இயந்திரம் கொண்டு பணிகள் தொடங்கபட்டுள்ளது. இதனையறிந்த அப்பகுதி பக்தர்கள் 20 க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு திரண்டு அறவழியில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர். மேலும் கோவில் முன்பு யாகசாலை நடைபெறும் இடத்தில் அலுவலகம் கட்டும் பணியை நிறுத்தாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தபடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
Tags
Next Story